உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சிகிச்சை

பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சிகிச்சை

பந்தலுார்;பந்தலுார் அருகே, பாக்கனா புத்துார் வயல் பகுதியில் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.கிராமத்தில் பெரும்பாலான மக்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து நடமாடும் மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர் அருள், சுகாதார ஆய்வாளர் பரணிதரன், தலைமை செவிலியர் சுதா உள்ளிட்டோர் கிராமத்தில் நேரில் வந்து முகாமிட்டனர். பழங்குடியின மக்கள் உள்ளிட்ட, கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு பரிசோதனை செய்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கிராமத்தில் கொசுக்கள் உற்பத்தி மற்றும் குடிநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ