உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி, சூலுார் பகுதிகளில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, அ.தி.மு.க.,வினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கருமத்தம்பட்டி நால்ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., திருவுருவப் படத்துக்கு, நகர செயலாளர் ஆதவன் பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். சோமனுார் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கணியூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கந்தசாமி, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கந்தவேல், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சூலுார் எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில், தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., திருவுருவ படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை