உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

ஊட்டி;ஊட்டியில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அருணா தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசியதாவது: இளம் வாக்காளர்களுக்கு இடையே, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.குறிப்பாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தாமாகவே முன்வந்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வாக்களிப்பது ஜனநாயக கடமையாக உள்ளதால், இளம் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிப்பதோடு, தங்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தவறாமல் வாக்களிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.தொடர்ந்து, வாக்காளர் தின உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டு, இரண்டு புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டையை கலெக்டர் வழங்கினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி அளவில் நடந்த சுவரொட்டி வரைதல், கடிதம் எழுதுதல், வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற, '16 மாணவர்கள், ரங்கோலி வரைந்த மூன்று மகளிர், சிறந்த தேர்தல் நிர்வாகிகள், 5 பேர், சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 4 பேர், சிறந்த உரை நிகழ்த்திய பள்ளி மாணவர்,' என, 28 பேருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, குறும்படம் வெளியிடப்பட்டது. இதில், முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ