மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
மேட்டுப்பாளையம் : நேந்திரன் வாழைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், நால் ரோட்டில் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள் ஏலம் மையத்திற்கு, விற்பனைக்கு கொண்டு வருவர்.நேற்று ஏல மையத்துக்கு, 2,500க்கு மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கேரளா மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, ஏராளமான வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். நேற்று நடந்த ஏலத்தில் நேந்திரன் வாழைக்காய் மிகவும் குறைவான விலைக்கு ஏலம் போனதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஏலம் மையத்தின் நிர்வாகி சின்னராஜ் கூறியதாவது:வாழைத்தார் ஏல விற்பனை மையத்துக்கு, நல்ல தரமான வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கதளி ஒரு கிலோ குறைந்தபட்சம், 20 லிருந்து, அதிகபட்சம், 40 ரூபாய்க்கும், நேந்திரன் குறைந்தபட்சம், 10 லிருந்து, அதிகபட்சம், 20 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார் அதிகபட்சம், 1,000 ரூபாய்க்கும், செவ்வாழை அதிகபட்சம், 750க்கும், தேன் வாழை, ரஸ்தாளி, ஆகிய இரண்டு வாழைத்தார்கள் அதிகபட்சமாக தலா, 500 ரூபாய்க்கும், ரோபஸ்டா, 450, மொந்தன், 350 ரூபாய்க்கு ஏலம் போனது.நேந்திரன் வாழைக்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக, 20 ரூபாய்க்கு ஏலம் போனது, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நேந்திரன் விலை குறைவுக்கு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்யும் மழை, கேரளாவில் கொரோனா பாதிப்பால், வாங்கும் திறன் குறைந்தது. இதனால் குறைவான விலைக்கு ஏலம் போனது. இது விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025