உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாவரவியல் பூங்காவில் மீண்டும் வந்தது "ஜேஜே

தாவரவியல் பூங்காவில் மீண்டும் வந்தது "ஜேஜே

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவு தூணில், 'ஜேஜே' என்ற ஆங்கில எழுத்துக்களை, புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஊட்டி தாவரவியல் பூங்கா, 1995ம் ஆண்டு, நூறு ஆண்டுகளை கடந்த நிலையில், அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, அங்கு, 'ஜேஜே' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய நினைவு தூண் அமைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியின் போது, 'ஜேஜே' எழுத்து, கான்கிரீட் மூலம் மறைக்கப்பட்டது. இதைச் சுற்றி பல்வேறு செடிகள் வளர்க்கப்பட்டதால், முழுமையாக மறைக்கப்பட்டது. தற்போது, அ.தி.மு.க., ஆட்சி நடந்து வருவதால், இந்த மாற்றம், சட்டசபையில் எதிரொலித்தது. இதையடுத்து, நினைவுத் தூணை மறைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு, எழுத்துக்கள் தெரியும் படியான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை