| ADDED : மார் 13, 2024 10:05 PM
பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சி சார்பில், பந்தலுாரில் பூங்கா அமைக்கும் பணி, 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.துவக்கத்தில், 'நகராட்சி கழிப்பிடத்தின் பின்பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள நகராட்சி சொந்தமான இடம் மீட்கப்பட்டு, அங்கு பூங்கா அமைக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.தற்போது, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி, பள்ளி நிர்வாகத்திடம் எந்தவிதமான அனுமதியும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது குறித்து புகார் கூறியும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வகையில் பணியை மேற்கொண்டு உள்ளது.பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், இப்பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்ட பின் கூறுகையில், ''அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் சமதள நிலமாக உள்ள நிலையில், அங்கே மாணவர்கள் விளையாடுவதற்கும், பள்ளியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு பூங்கா அமைப்பதால், மாணவர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவர்.எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தி அங்கு பூங்கா அமைக்க வேண்டும்,'' என்றார்.