உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சாலையில் கவிழ்ந்த கார்

 சாலையில் கவிழ்ந்த கார்

ஊட்டி: -ஊட்டி ஹில்பங்க் பகுதியில், கார் தலைக் கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊட்டி ஹில் பங்க் வழியாக, கூடலூர் மற்றும் தமிழகம் உட்பட, பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று பகல், ஒரு கார் மேல்பகுதியில் இருந்து, கட்டுப்பாட்டை இழந்து, பங்க் அருகே, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் அதிக சேதம் அடைந்த நிலையில், காரில் சென்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி