மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடு
4 minutes ago
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு
5 minutes ago
அணைகள் நீர்மட்டம்
5 minutes ago
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 'ஏஐ' தொழில்நுட்ப உதவியுடன், 'க்யூஆர்' கோடு வாயிலாக வாகன நிற்கும் இடங்களை கண்டறியும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மே மாதம் நடைபெறும் கோடை சீசன், செப்., மாதத்தில் துவங்கும் இரண்டாவது சீசன் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், ஊட்டி உட்பட, மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனை தவிர்க்க, நீலகிரியில் கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுடன் இணைந்து, போக்குவரத்து நெரிசலில் உள்ள சிரமங்களை ஆராய்ந்து, தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 'ஏஐ' எனப்படும், செயற்கை நுண்ணறிவு உதவியுடன், 'க்யூ ஆர்' கோடு வாயிலாக வாகன நிறுத்தும் இடங்களை கண்டறிதல், வாகனத்தின் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்தல், வாகனங்கள் நுழைதல், வெளியே செல்லுதல்,' போன்ற நெரிசல் குறித்த தகவல்கள் பெற வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணியை, நீலகிரி எஸ்.பி., நிஷா நேற்று துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், சோதனை அடிப்படையில் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் செயல்படுத்தப்படும்,'' என்றார்.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago