உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீடுகளில் தீபம் ஏற்றிய மக்கள்

வீடுகளில் தீபம் ஏற்றிய மக்கள்

பந்தலுார்:மாவட்டத்தின் அனைத்துபகுதிகளிலும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, விளக்கேற்றி பிரார்த்தனை நடந்தது.அயோத்தியில் நடந்த கும்பாபிேஷகம்; பிராண பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள் நடந்ததை தொடர்ந்து, ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார் சுற்று வட்டார பகுதி குடியிருப்புகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும், அட்சதையிட்டு பிரார்த்தனை செய்தனர்.பந்தலுார் அருகே பிதர்காடு மணிக்கொல்லி கிராமத்தில் உள்ள வீடுகளில் தீபம் ஏற்றி ஸ்ரீராமருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கூடலுார் மண்வயல் ஸ்ரீமதுரை மாதேஸ்வரன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. மசினகுடி, ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவிலில் மாலை விளக்கு பூஜை நடந்தது.கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வீடு முற்றங்களில் விளக்கேற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.கிராமங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், மாலை நேர பஜனைநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை