உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மருந்து தயாரிக்க கட்டடம் சான்றிதழ் கிடைக்க மனு

மருந்து தயாரிக்க கட்டடம் சான்றிதழ் கிடைக்க மனு

கோத்தகிரி:'பழங்குடியினர் கிராமங்களில் பாரம்பரிய மருந்து தயாரிக்க கட்டடம் கட்டுவதற்கு மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்க பரிந்துரைக்க வேண்டும்,' என, மனு அளிக்கப்பட்டுள்ளது.'தி கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட்,' சார்பில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, பாரம்பரிய மருத்துவம், இயற்கை விவசாயம், மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் மக்கள் மத்தியில், 'பண்டைய பழங்குடியினரின் மூலிகை அறிவை புதுபிக்கும் திட்டம்' என்ற பெயரில், பாரம்பரிய மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல பழங்குடிகள் பயன் பெற்றுள்ளனர்.அதில், 120 பேருக்கு, 'குவாலிடி கன்ட்ரோல் ஆப் இந்தியா' சான்று வழங்கப்பட்டு, 100 பேருக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலம், 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு, (டி.டி.யூ) பெங்களூரு ஆயுர்வேத பல்கலைக்கழகம், அறிவியல் பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, திட்டத்தை மேம்படுத்த உதவி வருகிறது. இந்நிலையில், நீலகிரி பழங்குடி கிராமங்களில், மூன்று பகுதிகளில் பாரம்பரிய மருந்து தயாரிக்க கட்டடம் கட்டுவதற்கு, பொதுப்பணித்துறை மூலமாக, மதிப்பீடு சான்றிதழ் வழங்க, மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்.இந்நிலையில், இந்த அமைப்பின் திட்ட மேலாளர் பாலசுப்ரமணியம் கலெக்டரிம் மனு அளித்தார். 'இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை