உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போகி பண்டிகை விழிப்புணர்வு ஊழியர்கள் பங்கேற்பு

போகி பண்டிகை விழிப்புணர்வு ஊழியர்கள் பங்கேற்பு

கோத்தகிரி;கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில், புகையில்லாத போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில், பழையபொருட்களை வெளியேற்றி, புகை இல்லாமல் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விளக்கப்பட்டது.இதில், பேரூராட்சி தூய்மை காவலர்கள், குடிநீர் 'பம்ப்' ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நகர் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் மற்றும் பழைய துணிகள் அப்புறப்படுத்தப்பட்டது.அதேபோல், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுப்படி, கீழ்குந்தா, பிக்கட்டி, தேவர்சோலை உட்பட மாவட்டத்தில் உள்ள, 11 பேரூராட்சிகளின் போகி பண்டிகை விழிப்புணர்வு நடந்தது. இதில், திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை