உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

ஊட்டி;ஊட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக, குடியரசு தினத்தை ஒட்டி, 'சுற்றுலா தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையம்,' என, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்து போலீசார் மோப்ப நாய் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். நீலகிரியில், எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவுப்படி, கடந்த வாரம், ஊட்டி படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் குன்னுார், கூடலுார் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ஊட்டி அரசு கலை கல்லுாரியில், இன்று குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடியேற்றி கலைநிகழ்ச்சி நடப்பதை ஒட்டி, நேற்று வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் போலீசார் மோப்பநாய் உதவியுடன் மேடை, மைதானம் மற்றும் நகர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். எஸ்.பி., சுந்தரவடிவேல் கூறுகையில்,''குடியரசு தினத்தை ஒட்டி மக்கள் கூடும் இடங்கல் மற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ள கல்லுாரி மைதானத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை