உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கானுயிர் குறித்த அறிவுத்திறன் போட்டி; சாதித்த மாணவர்களுக்கு பரிசு

கானுயிர் குறித்த அறிவுத்திறன் போட்டி; சாதித்த மாணவர்களுக்கு பரிசு

ஊட்டி;ஊட்டி செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அறிவுத்திறன் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில், உலக கானுயிர் வாரத்தை முன்னிட்டு, ஊட்டி செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், சாதித்த பள்ளி மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா ஜஸ்டின் தலைமை வகித்தார். சுற்றுசூழல் மன்ற பொறுப்பாசிரியர் சந்திரசேகர், மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் சிவதாஸ் மற்றும் ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய களப்பணியாளர் குமாரவேலு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில், ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிக்க முன்வரவேண்டும். தங்களது வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் கூடுமானவரை மரங்கள் நடவு செய்ய முயற்ச்சிக்க வேண்டும். வரும் நாட்களில், மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில், சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை