உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பிளாஸ்டிக் கலன்களில் இயற்கை உரம் தயாரிப்பு: ஓவேலி பேரூராட்சி அசத்தல்

 பிளாஸ்டிக் கலன்களில் இயற்கை உரம் தயாரிப்பு: ஓவேலி பேரூராட்சி அசத்தல்

கூடலூர்: ஓவேலி பேரூராட்சியில் பிளாஸ்டிக் கலன்களில், மக்கும் குப்பையை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக சேகரிக்கப்படும், குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். குப்பை கிடங்கு அமைக்க இடம் கிடைக்காத நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்ற சிரமப்பட்டனர். இதற்கு தீர்வாக, கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் பிளாஸ்டிக் டேங்குகளை பயன்படுத்தி குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றனர். இதற்காக, பார்வுட் அருகே, சாலையோரம் சிறிய அறை அமைத்து, பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை எந்தவித துர்நாற்றமும் இன்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கின்றனர். மக்கும் குப்பைகளை, சாலையோரத்தில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சேமிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கலன்களில் கொட்டி மூடி கண்காணிக்கின்றனர். 60 நாட்களுக்குப் பின், இயற்கை உரமாக மாறி விடும். பின் வெளியே எடுத்து, சுத்தம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இப்பணிகள் சாலையோரம் நடந்தாலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மேற்கொண்டு வருவதால், இப்பணிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'ஓவேலி பேரூராட்சியில், சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து மக்கும் குப்பையை தனியாக பிரித்து, பிளாஸ்டிக் கலன்களில் கொட்டி, 15வது நாளில், ஒவ்வொரு கலனிலும் தலா 5 லிட்டர் சாணக் கரைச்சலை ஊற்றி, சுழற்றிவிடப்படும். 60வது நாளில் எடுக்கப்படும் இயற்கை உரங்கள் வெளியே எடுத்து, அதனை உலர்த்தி விற்பனை செய்து விடுகிறோம்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி