உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராமகிருஷ்ண பரமஹம்சர் குருபூஜை விழா

ராமகிருஷ்ண பரமஹம்சர் குருபூஜை விழா

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் குருபூஜை இம்மாதம், 7ம் தேதி நடக்கிறது.அதிகாலை, 5:00 மணிக்கு ஆரத்தி, பூஜை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழு, பாலமலை ரங்கநாதர் பஜனை குழு, அவினாசிலிங்கம் மனையியல் பல்கலையின் பஜனை, தண்டபாணி குழுவினரின் பஜனை, மேட்டுப்பாளையம் வாசுதேவன் குழுவினரின் பஜனை, சுவாமி ஹரிவ்ரதானந்தரின் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.காலை, 7:00 மணிக்கு வித்யாலயா கொடியை, ஏலகிரி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமோஷானந்தர் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, 8:00 மணி அளவில் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியின் சுயநிதி பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலை மற்றும் கல்வி பொருட்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார்.குருபூஜை விழாவையொட்டி, மாநில அளவில் நடந்த இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து, வித்யாலயத்தில் நீண்ட காலமாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். முற்பகல், 11:00 மணியளவில் சென்னை சிவ ஸ்ரீ ஹரிணி குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும், பகல், 1:30 மணியளவில் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை, 3:30 மணிக்கு நடக்கும் பொது கூட்டத்தில், 'பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்' என்ற தலைப்பில் சுவாமி விமோஷானந்தர், 'குருமூர்த்தி குணநிதி சாரதாமணி' என்ற தலைப்பில் நடராஜன் சியாம் சுந்தர் ஆகியோர் பேசுகின்றனர். மாலை, 5:30 மணிக்கு சென்னை அருள் குழுவினரின் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடக்கிறது விழாவையொட்டி அன்னதானம், வித்யாலய வரலாறு புகைப்பட கண்காட்சி, ராமகிருஷ்ண இயக்க புத்தக கண்காட்சி, ராமாயண தீம் பார்க் நிகழ்வுகள், முன்னாள் மாணவர் சந்திப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதற்கான ஏற்பாடுகள், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை