உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மஞ்சூர் சாலையில் மையக்கோடு வரையாததால் விபத்து அபாயம்

மஞ்சூர் சாலையில் மையக்கோடு வரையாததால் விபத்து அபாயம்

ஊட்டி: ஊட்டி- மஞ்சூர் இடையே சாலையில் மையக்கோடு வரையாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் இருந்து, மஞ்சூர் காத்தாடி மட்டம், குந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, பாலகொலா, மஞ்சக்கம்பை மற்றும் தங்காடு, அதிக்கரட்டி உட்பட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. தவிர, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலை, விரிவுபடுத்தப்பட்டு மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையில் மையக்கோடு வரையவில்லை. குறிப்பாக, லாரன்ஸ் பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து, துந்தளா மட்டம் வரை, மையக்கோடு வரையாததால் விபத்து அபாயம் உள்ளது. இரவு நேரங்களில், இருபுறங்களில் இருந்தும் வேகமாக வரும் வாகனங்களால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.எனவே, நெடுஞ்சாலை துறையினர் குறிப்பிட்ட பகுதியில், சாலையில் மையக்கோடு வரைய நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ