மேலும் செய்திகள்
பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
1 minutes ago
நில அளவை அலுவலர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்
8 minutes ago
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
23 hour(s) ago
கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் செம்பாலா வரை, சேதமடைந்த சாலை சீரமைப்பு பணியை முழுமையாக மேற்கொள்ளாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. சேதமடைந்த இச்சாலையில், செம்பாலா -நாடுகாணி இடையே, 9 கி.மீ., சாலை சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. மீதமிருந்த செம்பாலா முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலான, 1.4 கி.மீ., துார சாலையை சீரமைக்கவில்லை. பருவமழையின் போது சாலை மேலும் சேதமடைந்ததால், வாகனம் இயக்க பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் இச்சாலையில் சீரமைப்பு பணி துவங்கப்பட்டது. செம்பாலாவில் துவங்கிய சீரமைப்பு பணி, டி.கே., பேட்டை, அருகே தனியார் திருமணம் மண்டபம் வரை நடந்தது. அங்கிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலான, அரை கிலோ மீட்டர் சாலை சீரமைக்கவில்லை. சீரமைப்பு பணி முழுமையாக நிறைவு பெறாததால் மூன்று மாநில ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஓட்டுனர்கள் கூறுகையில், ''சேதமடைந்த செம்பாலா -பழைய பஸ் ஸ்டாண்ட் இடையே, சாலை சீரமைப்பு பணி, முழுமையாக நிறைவு பெறவில்லை. என்ன காரணத்தினால், 300 மீட்டர் துாரம் சாலை சீரமைக்காமல் விட்டு செல்லப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. விட்டு சென்ற இப்பகுதி சாலையை உடனடியாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில்,'அரசால் விடுவிக்கப்பட்ட நிதியில் இப்பகுதியில், 1.1 கி.மீ., துாரம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலை விரைவில் சீரமைக்கப்படும்,' என்றனர்.
1 minutes ago
8 minutes ago
23 hour(s) ago