உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தையை பார்த்து ஓட்டம்; அலுவலக ஊழியர் படுகாயம்

சிறுத்தையை பார்த்து ஓட்டம்; அலுவலக ஊழியர் படுகாயம்

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் சிறுத்தையை பார்த்து ஓடிய அலுவலக ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.பந்தலுார் அருகே சேரம்பாடி 'டான்டீ' பகுதியில் அலுவலக ஊழியராக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி,42. இவர் நேற்று மாலை, ஏலியாஸ் கடை பகுதியில் உள்ள டான்டீ அலுவலகத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது, எதிரே சிறுத்தை நடந்து வந்துள்ளது.அதனை பார்த்து தப்பி ஓடியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இவருக்கு பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டான்டீ தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பள்ளி, கல்லுாரி சென்று திரும்பும் மாணவர்களை பெற்றோர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை