உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா விசாவில் வந்து சூட்டிங் நடத்திய ரஷ்யர்கள்: ஓட்டல் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை

சுற்றுலா விசாவில் வந்து சூட்டிங் நடத்திய ரஷ்யர்கள்: ஓட்டல் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை

ஊட்டி: ஊட்டியில் நடிகர் சூர்யா படபிடிப்புக்காக சுற்றுலா விசாவில் வந்து, ஓட்டலில் தங்கிய ரஷ்ய நாட்டினர் குறித்து தகவல் தெரிவிக்காத ஓட்டல் நிர்வாகத்தினரை போலீசார் எச்சரித்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படம் ஒன்றின் சண்டைக்காட்சிகள் படம் ஆக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த, 27 ம் தேதி சுற்றுலா விசா பெற்று வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள, சில தனியார் ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பிற்கு சென்று வந்தனர்.வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வந்து தங்கினால் தங்கும் விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.ரஷ்யா நாட்டினர் தங்கி இருந்தது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, போலீசாரை அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்.போலீசார் கூறுகையில், 'ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள ஓட்டல் வெல்பேக் ரெசிடென்சி, ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் சபையர் மற்றும் சபையர் கார்டன் வியூ ஆகிய ஓட்டல்களில் தங்கிய, 155 பேரில், 42 பேர் கடந்த வாரம் ரஷ்ய திரும்பிய நிலையில், 113 பேர் அங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின், விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கி எச்சரித்தோம். அங்கு தங்கி இருந்த ரஷ்ய நாட்டினர் அனைவரையும் வெளியேற்றினோம். இனி, வரும் நாட்களில் வெளி நாட்டினர் ஊட்டியில் தங்குவது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 18, 2024 08:41

சூரியாவை நொங்கெடுக்காம?


ஆரூர் ரங்
ஆக 17, 2024 20:51

இதே குற்றத்தை வேறு யாராச்சும் செய்திருந்தால் கம்பியெண்ணிக் கொண்டிருப்பார்கள். . பெரிய ஜால்ரா குடும்பம் என்பதால் மயிலிறகால் தடவிக் கொடுக்கிறார்கள்.


sankaranarayanan
ஆக 17, 2024 19:56

ஏன் அந்நிய நாட்டு பிரஜைகளை அனுமதி இயன்றி அங்கே அழைத்துவந்தவர்களையும் அதில் முக்கிய பங்கேற்ற நடிகர் சூர்யாவையும் ஏன் விட்டுவிட்டிருக்கள் அவர்கள்மீய்து எந்த நடவடிக்கைகளும் கிடையாதா?


rama adhavan
ஆக 17, 2024 20:52

தண்டிக்க வேண்டும். ஆனால் செய்ய மாட்டார்கள்.ஆமாம் மத்திய அரசு தானே விசா ரத்து செய்ய முடியும். மேலும் ரஷ்யா தூதரகத்தில் மத்திய அரசு புகார் செய்து அவர்கள் நாட்டில் நடவடிக்கை மேற்கொள்ள சொல்ல வேண்டும்.


HoneyBee
ஆக 17, 2024 21:16

குள்ளன் மீது இந்த அரசு ஏதும் நடவடிக்கை எடுக்காது.. காரணம் அவன் அடிவருடி


M Ramachandran
ஆக 17, 2024 19:46

சூர்யா தீ மு க்கா கட்சியின் வொய்சு ரிடர் வித். வருடம் ஓட்டால் நிருவாகம் இந்த விஷயத்தியய கேட்டால் ஏன் வம்பு என்று இருந்திருப்பர்


Nandakumar Naidu.
ஆக 17, 2024 19:39

மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தூங்கிக் கொண்டிருந்ததா? மாநில அரசின் போலீஸ் துறை அவர்கள் சென்றுவிட்ட பிறகு ஓட்டலை எச்சரிக்கை விடுத்ததாம். பொறுப்பற்ற போலீஸ் துறையின் செயல் கண்டனத்திற்குரியது.


கல்யாணராமன் சு.
ஆக 17, 2024 20:00

மத்திய அரசு என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க ? நாட்டுக்கு உள்ளே வரும்போது விசா இருக்கா இல்லையா அப்படின்னு பாத்துட்டு உள்ளே அனுமதிப்பாங்க ... அதுக்கப்பறம் , எந்த மாநிலத்துக்கு போறாங்களோ , அந்த மாநிலக் காவலர்கள்தான் அவங்களை கண்காணிக்கணும் .... உங்களுக்கு இன்னொரு போனஸ் நியூஸ் ..... இவங்க அத்தனை பேரையும் ஷூட்டிங்கில் ஈடுபடுத்தியது நடிகர் சூர்யாவோட படப்பிடிப்பு நிறுவனம் . .... சுற்றுலா விசாவில கூட்டிட்டு வந்துட்டு சம்பளம் குடுக்கும் வேலையிலே ஈடுபடுத்தியது அந்த படப்பிடிப்பு நிறுவனந்தான் . அவர்களைத்தான் முதல்லே உள்ளே போடணும் ... இது பற்றிய புகாரை ஒரு பத்திரிக்கையாளர் கொடுத்தப்பறந்தான் போலீசே முழிச்சுக்கிட்டாங்க ....


V RAMASWAMY
ஆக 17, 2024 19:08

நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் தெரியவேண்டிய பலருக்கும் பல சட்ட சம்பந்தமான, காவல் துறை சம்பந்தமான செய்யவேண்டிய நடவடிக்கைகள், பின்பற்றவேண்டிய தேவைகள், முன்னெச்சரிக்கைகள் தெரிவதில்லை. ஏன் சம்பந்தப்பட்ட துறையிலுள்ள அதிகாரிகளுக்கே முழுவதும் தெரியுமா என்பதே சந்தேகம். முன்பெல்லாம் அந்தந்த ஏரியா காவல் நிலையத்தில் அனைத்து விடுதிகளும் ஒவ்வொரு நாளும் விடுதியில் தங்கும் நபர்கள் பற்றிய முழு விபரங்களும் தெரிவித்தாகவேண்டும் என்ற ஒரு நியதி இருந்தது. செயற்படுத்திக்கொண்டும் இருந்தார்கள்.


Mohanakrishnan
ஆக 17, 2024 19:05

Only bangaladeshis are allowed not others


மேலும் செய்திகள்







புதிய வீடியோ