உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் குப்பை குவியல்: துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு

என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் குப்பை குவியல்: துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு

ஊட்டி;ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் குவிந்துள்ள குப்பை குவியல் அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) வளாகத்தில், நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கும் வகையில், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இங்குள்ள கடைகள், அரசியல் காரணங்களால் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும், 100 சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக, விசாலமான 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா வாகனங்களில் இருந்து, அன்றாடம் வெளியேறும் குப்பை கழிவுகள் வளாகத்தில் குவிந்துள்ளன. குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றாததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் அதிக அளவில் குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கும் வகையில், கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை