மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. பள்ளியில், 1973--74ம் ஆண்டு, 11ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் படித்து முடித்து தமது, 50வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு கூட்டம் தேரம்பாளையம் ரங்கைய மஹாலில் நடந்தது. இவர்களுடன் சீனியர் மாணவர்கள் (1972--73), ஜூனியர் மாணவர்கள் (1974--75) என, 200 பேர் பொன் விழாவை கொண்டாடும் வகையில், அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்தனர். அப்போது தான் படித்த காலத்தில் நடந்த பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், பத்மஸ்ரீ விருது பெற இருக்கும் பத்திரப்பன் ஆகிய இருவரையும் அழைத்து கவுரப்படுத்தினர். மகாஜன பள்ளி குழுத் தலைவர் நவரத்தினமல் சாங்க்லா, முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
03-Oct-2025