உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் உத்தரவுப்படி, எஸ்.ஐ., கபில்தேவ் தலைமையில் போலீசார் நேற்று தொரப்பள்ளியில் சில கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், சுந்தரலிங்கம், 34, என்பவரின் கடையில், 63 பண்டல்களில், 995 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார். அவைகளை பறிமுதல் செய்து, சுந்தரலிங்கத்தை கைது செய்தனர். இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து, கடையில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்தோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ