உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

பழங்குடியின கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி பழங்குடியின கிராமங்களில், எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு நடந்தது. பந்தலுார் அருகே, சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், அதிக அளவில் பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, விவரங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், சப்பந்தோடு பழங்குடியின கிராமத்தில், பாக்கு உரிக்கும் பழங்குடியின தொழிலாளர்கள் மத்தியில், எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டியது அவசியம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, விண்ணப்பங்கள் வழங்கி குடும்பத்தில் உள்ளவர்களின், விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வாங்கி செல்லப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே அனைவரும் வீடுகளில் இருப்பதால், சுற்றுவட்டார பழங்குடியினர் கிராமங்களிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கைகேயி தலைமையிலான குழுவினர், விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை