மேலும் செய்திகள்
நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
12-Dec-2025
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
12-Dec-2025
நீலகிரியில் ரூ.7.27 கோடியில் நலத்திட்ட உதவிகள்
12-Dec-2025
சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்
12-Dec-2025
கூடலுார்:கூடலுார் பகுதியில் பயிரிட்ட பாகற்காய் செடிகளை, மகசூலுக்கு முன்பாக நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதி வயல் நிலங்களில் பருவமழை காலத்தில் நெல்லும் கோடையில், காய்கறிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு பகுதியில் பரவலாக பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், பாகற்காய் நோய் தாக்கி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. முதல் அறுவடை துவங்கும் முன்பாகவே, செடிகள் நோய் தாக்கி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் முழு நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 'நஷ்டத்தை எவ்வாறு ஈடு செய்வது' என, தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சிறு விவசாயிகள் கூறுகையில், 'இயற்கை உரம் மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். செடிகள் நோய் தாக்கி, மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.
12-Dec-2025
12-Dec-2025
12-Dec-2025
12-Dec-2025