உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று சாதிக்க அறிவுரை

 மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று சாதிக்க அறிவுரை

கூடலுார்: 'மாணவர்கள் நேர்மையான முறையில் ஒழுக்கத்தோடு கல்வி கற்று சாதிக்க வேண்டும்,' என, கூடலுார் தேவர்சோலையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது. கூடலுார் தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் சட்டம் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள, சட்ட விழிப்புணர்வு முகாம் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்தினால் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். கல்வியும் பாதிக்கப்படும். எனவே, மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இவற்றுக்கு அடிமையாகாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் நேர்மையான முறையில் ஒழுக்கத்தோடு கல்வி கற்று சாதிக்க வேண்டும்,'' என்றார். முகாமில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை