மேலும் செய்திகள்
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
11-Dec-2025
கடன் பெற்று தலைமறைவான நபருக்கு ஆறு மாதம் சிறை
11-Dec-2025
சூலூர் : 'பல முறை படிப்பதை விட, ஒரு முறை செய்முறை பயிற்சி செய்து பார்த்தால், படித்தது மறக்காது,' என, கலெக்டர் கிராந்தி குமார் பேசினார்.அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஜி.டி., நாயுடு அறக்கட்டளை சார்பில், ரூ. 20 லட்சம் மதிப்பில், ஜி.டி., ஸ்டெம் எனும், அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.ஆய்வகத்தை கலெக்டர் கிராந்தி குமார் திறந்து வைத்து பேசியதாவது:தொழில் துறையில் வளர்ச்சி பெற்ற நகரமாக, கோவை உருவாக காரணம் ஜி.டி., நாயுடு போன்ற ஆராய்ச்சியாளர்கள் தான். ஸ்டெம்' ஆய்வகத்தின் மூலம் உங்களுக்கு பல பயன்கள் கிடைக்கும். அதை பயன்படுத்தி திறமையை வளர்த்து கொள்ளுங்கள். பலமுறை படிப்பதை விட, ஒரு முறை செய்முறை பயிற்சி செய்து பார்த்தால், படித்தது எதுவும் மறக்காது. பலதரப்பட்ட வசதிகள் கொண்ட பழமையான பள்ளியில் படிக்கும் நீங்கள், வரவுள்ள பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஜி.டி., நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபால் தலைமை வகித்தார்.அறங்காவலர் சந்திரா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார்.பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கேசவ குமார், உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், பி.டி.ஏ., தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
11-Dec-2025
11-Dec-2025