உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் திடீர் ஆய்வு: தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

மாநில எல்லையில் திடீர் ஆய்வு: தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

கூடலுார்;முதுமலை, கக்கனல்லா சோதனை சாவடியில், சுற்றுலா பயணிகளிடமிருந்து, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கும் பணிகளை கலெக்டர் அருணா ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும், 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் 'பிளாஸ்டிக்' பொருட்களை பறிமுதல் செய்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு, 20 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூடலுார் நகராட்சி பகுதியில், சீரமைக்கப்பட்ட தொரப்பள்ளி-- கோடமுலா சாலை; தேன்வயல்-கோத்தர்வயல் சாலைகளை ஆய்வு செய்தார்.ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை, புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடம், பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், மாணவர்களின் வருகை பதிவேடு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, முதுமலை அருகே, தமிழக- கர்நாடக எல்லையான, கக்கநல்லா சோதனை சாவடியில், சுற்றுலா பயணிகளிடமிருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கும் பணியை ஆய்வு செய்தார். இப்பணிகளைத் தடை இன்றி தொடர அறிவுறுத்தினார்.கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரதுல்லா, முதன்மை கல்வி அலுவலர் கீதா, நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியர், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை