உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம்: டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம்: டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி: ஊட்டியில் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கண்டித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில், டாஸ்மாக் நிர்வாகம் எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல், அவசர கதியில் காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து, டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டு குழு சார்பில், ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் ஆல்துரை தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் மகேஷ், எல்.பி.எப்., மாவட்டத் தலைவர் கணேஷ் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்க மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 'அவசரகதியில் அமல்படுத்தியிருக்கும் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில், ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்; டாஸ்மாக் கடைகளில், 23 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை