மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
3 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
4 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
5 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
5 hour(s) ago
குன்னுார்:தென் மாநிலங்களில், நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் குன்னுார் தேயிலை ஏல மையம், டீசர்வ், கோவை கொச்சி ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது.நடப்பாண்டுக்கான, 7வது ஏலத்தில் தேயிலை துாளுக்கான சராசரி விலை உயர்ந்து உள்ளது. 'இலை மற்றும் டஸ்ட் ரகத்தில் குன்னுாரில், 93.19 ரூபாய்; டீசர்வ், 87.97 ரூபாய்; கோவை, 107.38 ரூபாய்; கொச்சி, 137.15 ரூபாய்,' என, தேயிலை கிலோவுக்கான சராசரி விலை இருந்தது.ஆர்த்தோடக்ஸ் மற்றும் சி.டி.சி., ரகத்தில், 'குன்னுாரில், 92.12 ரூபாய்; டீசர்வ், 87.97 ரூபாய்; கோவை, 107.94 ரூபாய்; கொச்சி, 134.61 ரூபாய்,' என, சராசரி விலை இருந்தது. கடந்த, 6வது ஏலத்தை விட இந்த ஏலத்தில் ஒரு சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago