மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
கூடலுார்:தேவர்சோலை, நடுவட்டம் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டன.கூடலுார், தேவசோலை, நடுவட்டம் பகுதிகளில் பழைய பஸ் ஸ்டாண்டுகளை இடித்து, மூலதன மானிய திட்ட நீதி தலா, 3 கோடி ரூபாய் நிதி மூலம், புதிய பஸ் ஸ்டாண்டுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.தேவர்சோலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் வள்ளி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், செயல் அலுவலர் மோசஸ், துணை தலைவர் யுனுஸ் பாபு, கவுன்சிலர்கள், வியாபாரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நடுவட்டம் பஸ் ஸ்டாண்ட் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம்ஷா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் பிரதீப்குமார், பேரூராட்சி தலைவர் கலியமூர்த்தி, துணை தலைவர் துளசி உட்பட பலர் பங்கேற்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025