உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பன்றியிடமிருந்து தப்பியவர் கீழே விழுந்து படுகாயம்

பன்றியிடமிருந்து தப்பியவர் கீழே விழுந்து படுகாயம்

பந்தலுார் : பந்தலுார் அருகே நெல்லியாளம் 'டான்டீ' பகுதியில், உதயசூரியன், 54, என்பவர் தேயிலை பறித்து கொண்டிருந்துள்ளார்.அப்போது காட்டுப்பன்றி அவரை நோக்கி வந்துள்ளது. பன்றியிடமிருந்து தப்பிக்க ஓடியதில் கீழே விழுந்து இடுப்பு பகுதியில் காயம் அடைந்தது.பாதிக்கப்பட்டவரை, கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அடைந்த தொழிலாளியை பிதர்காடு வனச்சரகர் ரவி நேரில் சென்று விசாரித்தார். அந்த பகுதியில் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ