உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி மாணவர்களை விரட்டிய காட்டு யானை; டி.எப்.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பள்ளி மாணவர்களை விரட்டிய காட்டு யானை; டி.எப்.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கூடலுார்:'கூடலுார் அருகே, மாணவர்களை விரட்டிய, காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிகுள் விரட்ட வேண்டும்; மாணவர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும்,' என, வலியுறுத்தி டி.எப்.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் தொரப்பள்ளி அருகே உள்ள கோடமுலா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.நேற்று, காலை, 8:00 மணிக்கு மாணவர்கள், பள்ளி செல்வதற்காக கோடமுலா சாலை வழியாக நெடுஞ்சாலை நோக்கி நடந்து வந்தனர். அப்போது சாலையோரம் இருந்த யானை இவர்களை விரட்டியது. மாணவர்கள் அலறி அடித்து ஓடி உயிர் தப்பினர். இதில், பிளஸ்-1, படிக்கும் மாணவி காளி, 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் பொம்மன் கீழே விழுந்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டது.இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர், பொதுமக்கள், மாணவர்களுடன் கூடலுார் மாவட்ட வன அலுவலர் (டி.எப்.ஓ.,) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில்,' குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானையை விரட்ட வேண்டும்; மாணவர்களை வனத்துறை வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்து சென்று வர வேண்டும்; கிராமத்தைச் சுற்றி அகழி மற்றும் மின்வேலி அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.அவர்களுடன், கூடலுார் டி.எப்.ஓ., கொம்மு ஓம்காரம், டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் ராஜேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினர். 'கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் அளிக்க உறுதியை ஏற்று பகல், 12:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.போராட்டத்தில், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், தொரப்பள்ளி பிரகாஷ், மா.கம்யூ., மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை