உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய பாலத்தில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் நிம்மதி

புதிய பாலத்தில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் நிம்மதி

கூடலுார்;மேல் கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கப்பட்டதால், ஓட்டுனர்கள், நிம்மதி அடைந்துள்ளனர்.கூடலுார் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மேல் கூடலுார் அருகே குறுகிய பாலத்தை உடைத்து புதிய பாலம் கட்டும்பணி, கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. அக்., மாதம் சாலையை ஒட்டி புதிய பாலம் அமைக்கும் பணிக்காக, பொக்லைன் மூலம் மண் அகற்றும் பணியின் போது, மண் சரிவு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.இதனால், நீலகிரி, கேரளா, கர்நாடாக இடையே இயக்கப்படும் வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டன. பயணிகள், ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து செயல்பட்டு, 15 மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்து சீரமைத்தனர்.புதிய பாலம் கட்டும் பணி கடந்த மாதம் நிறைவு பெற்றது. கடந்த வாரம் பாலத்தை ஒட்டிய சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி