மேலும் செய்திகள்
பீட்ரூட் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
20 hour(s) ago
மழைக்கு இடிந்த கால்வாய் தவிப்பில் குடியிருப்பு வாசிகள்
20 hour(s) ago
ஊட்டி:பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் முக்கியத்துவம் பெறுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, படகு இல்லத்திற்கு செல்கின்றனர்.மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை, ஓய்ந்துள்ள நிலையில், பகல் நேரத்தில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரான காலநிலை நிலவுகிறது.பகல் நேரத்தில் இதமான காலநிலை நிலவுவதால், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, தமிழகத்தின் சமவெளி பகுதியில் இருந்து, சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது. மேலும், கர்நாடகா, கேரள சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.நேற்று படகு இல்லத்தில் கூட்டம் அதிகரித்தது. குடும்பத்துடன், வந்திருந்த சுற்றுலா பயணிகள் குதுாகலத்துடன் படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டுக்களித்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago