உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டி.ஆர்., பஜார் -ஊசிமலை சாலை சீரமைப்பு: வாகனங்களை கவனமாக இயக்க அறிவுரை

டி.ஆர்., பஜார் -ஊசிமலை சாலை சீரமைப்பு: வாகனங்களை கவனமாக இயக்க அறிவுரை

கூடலுார்:ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், டி.ஆர்., பஜார் முதல் ஊசி மலை வரை, சாலை சீரமைக்கப்பட்டுள்ளதால், விபத்துக்களை தவிர்க்க வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை, அகலப்படுத்தி, சீரமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அனுமாபுரம் முதல் - ஊசிமலை வரையிலான, 16 கி.மீ., துார சாலையை, 70 கோடி ரூபாயில் அகலப்படுத்தி சீரமைக்கு பணி நடந்து வருகிறது. இப்பகுதியில், மண் சரிவை தடுக்க, தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் செல்ல, 71 இடங்களில் சாலை குறுக்கே வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இதில், பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், நடுவட்டம் டி.ஆர்., பஜார் முதல் ஊசிமலை வரை, 10 கி.மீ., துாரம் புதிதாக தார் சாலை போட்டுள்ளனர். வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.இந்நிலையில், நடுவட்டத்திலிருந்து கீழ்நோக்கி வரும் வாகனங்கள் வேகமாக இயக்குவதன் மூலம், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனமாக இயக்க வலியுறுத்தியுள்ளனர்.போலீசார் கூறுகையில், 'மலைப்பகுதியில் உள்ள இப்பகுதி சாலையில், கிழ்நோக்கி வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இரண்டாவது கேரில் பாதுகாப்பாக இயக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி