உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் உருண்ட பாறை போக்குவரத்து பாதிப்பு

சாலையில் உருண்ட பாறை போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி;கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 5ம் தேதி இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஏற்கனவே நிலம் ஈரம் கண்டுள்ள நிலையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் இடையே, மேல் தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மண் சரிவு ஏற்பட்டதில், பாறைகள் சாலையில் உருண்டன. தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, அதிகாலை, 3:00 மணிக்கு, பொக்லைன் உதவியுடன், மண் குவியல் மற்றும் பாறைகளை சாலை ஓரத்திற்கு அப்புறப்படுத்தி, ஒரு புறமாக வாகனங்கள் சென்று வர வழி ஏற்படுத்தினர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை