உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெற்றி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

வெற்றி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

கோத்தகிரி;கோத்தகிரி கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, குடிமனை அருள்மிகு வெற்றி விநாயகர் மற்றும் ஸ்ரீ கன்னிமாரியம்மன் திரு கோவிலில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.அங்கு புதிய திருவுருவமேனிகள் சிற்ப சாஸ்திரப்படி அமைக்க பெற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணி முதல் 6:00 மணி வரை, கோவில் பூஜாரி மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீ பட்டத்து அரசியம்மன் திருக்கோவிலில் தைப்பொங்கல் பூஜை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை