உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முற்றத்தை அலங்கரிக்க கலர் கலராய் கோலப்பொடி

முற்றத்தை அலங்கரிக்க கலர் கலராய் கோலப்பொடி

ஊட்டி;ஊட்டி மார்க்கெட் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மார்க்கெட் மற்றும் வெளிப்புறத்தில் நடைபாதை பகுதிகளில் ஏராளமான மண் பானை, கரும்பு, மஞ்சள் குலை போன்றவைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது போல், நகர்ப்புறங்கள், பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கும் மண் பானைகளில் பொங்கல் வைக்கப்படுவதால், மண் பானைகளில் பொங்கல் வைக்க மக்கள் விரும்பி வாங்கி சென்றனர். அதேபோல், இன்று மார்கழி மாதம் நிறைவடைந்து தை பிறக்கிறது. தை பொங்கலை முன்னிட்டு வீடு, கோவில், திருமண மண்ட பங்களில் பல வண்ணங்களில் கலர் கலராய் கோலங்கள் காட்சியளிப்பதை காணலாம். ஊட்டி மார்க்கெட்டில் சிறிய பாக்கெட்களில் விற்கப்படும் பல வண்ண கோலப்பொடிகளை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை