| ADDED : பிப் 12, 2024 08:47 PM
ஊட்டி:ஊட்டியில், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.ஊட்டி அருகே கூலி தொழிலாளி தம்பதியின், 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம், 17ம் தேதி திருவிழா சென்ற சிறுமியை உறவினர்கள் அழைப்பதாக கூறி, கேரட் மூட்டை தூக்கும் தொழிலாளியான அஜித், 23, என்பவர், அருகில் உள்ள சோலைக்குள் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது சிறுமி எதிர்ப்பு தெரிவித்து சப்தம் போட்ட போது சிறுமியை, அஜித் பலமாக தாக்கியுள்ளார். இதனால் அலறிய சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சையில் சேர்த்தனர். புதுமந்து போலீசார் போக்சோ உட்பட, 6 பிரிவுகளில் அஜித் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில், அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருணா உத்தரவிட்டார். இந்த நகல் கோவை மத்திய சிறையில் உள்ள அஜித்திடம் வழங்கப்பட்டது.