உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் /  பாதை யில் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

 பாதை யில் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

வேப்பந்தட்டை: பெரம்பலுார் மாவட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, வண்டிப்பாதை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல், அவதுாறு வழக்கு தொடரப்பட்டதால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம் பிரம்மதேசத்தில் வண்டிப்பாதை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் மயானமாக பயன்படுத்தி வந்தனர். இதன் அருகில் விவசாய நிலம் வைத்துள்ள பிரபு என்பவர், சென்னை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன், 'வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தக் கூடாத ு ' என வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் அதே ஊரைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவருடைய தாய் மரியசெல்வம் இறந்தார். அவரது உடலை, ஐகோர்ட் உத்தரவை மீறி, வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்து பிரபு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அங்கு புதைக்கப்பட்ட மரியசெல்வத்தின் உடலை தோண்டி எடுத்து, முறையான மயானத்தில் புதைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மரியசெல்வத்தின் உடலை தோண்டியெடுத்து, பிரம்மதேசம் அரசு புறம்போக்கு மயானத்தில், கிறிஸ்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடலை புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை