| ADDED : ஏப் 18, 2024 12:47 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே வருவதை தடுப்பதற்காக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த தடையை மீறி, நாம் தமிழர் கட்சியினர் உள்ளே சென்றனர். மேலும், வேட்பாளருடன் அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர் சிலரும் சென்றனர். வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், மக்கள் யாரும் இவர்களின் பிரசாரத்தை கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் அனைவரும் திரும்பினர்.இதற்கிடையே, அனுமதியின்றி பிரசாரம் மற்றும் தேர்தல் விதிமீறல் என இரு பிரிவுகளில், திருச்சி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது, வெள்ளனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.