உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி அருகே ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல் இலங்கைக்கு கடத்த பதுக்கியவர் கைது

தொண்டி அருகே ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல் இலங்கைக்கு கடத்த பதுக்கியவர் கைது

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.இலங்கைக்கு ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக அதிகளவில் கடத்தல் நடக்கிறது. தொண்டி பகுதியிலிருந்து மருத்துவ குணம் கொண்டவை என கடல் அட்டை மற்றும் கஞ்சா அதிகமாக கடத்தப்படுகிறது. நேற்று காலை 6:00 மணிக்கு தொண்டி எஸ்.ஐ.,க்கள் விஷ்ணு, நாச்சியப்பன், தனிப்பிரிவு ஏட்டு துரை மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது எம்.வி.பட்டினம் கடற்கரையில் சோதனையில் ஈடுபட்ட போது 40 மூடைகளில் 500 கிலோ கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம். எம்.வி.பட்டினத்தை சேர்ந்த காளிமுத்து 65, கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்த போலீசார் கடல் அட்டைகளையும், கைதானவரையும் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய கே.கே.பட்டினம் முத்துசெல்வத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ