உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 100 சதவீத தேர்ச்சி: பள்ளியில் பாராட்டு

100 சதவீத தேர்ச்சி: பள்ளியில் பாராட்டு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து முன்னாள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜூ, ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், வட்டார பங்கு பாதிரியார் தேவசகாயம், ஜமாத் தலைவர் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை நிர்வாகிகள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர். தொடர்ந்து அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பெற்றோர்களிடம் வலியுறுத்தப்பட்டது. விழாவில், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, பகுருதீன், ஜெயக்குமார், மதிவாணன், அயூப் கான், ஆசிரியர்கள் சதக்கத்துல்லா, ஜோதி, காளியம்மாள், பொன்னி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை