உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்து வழக்கில் 6 மாதம் சிறை

விபத்து வழக்கில் 6 மாதம் சிறை

திருவாடானை : திருவாடானை அருகே கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் வேலு 60. இவர் 2023 மார்ச் 7 ல் ஆடு வாங்குவதற்காக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கருமொழி அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது டூவீலர் மோதியதில் காயமடைந்த வேலு திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு இறந்தார்.திருவாடானை போலீசார் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை சேர்ந்த சின்னி கிருஷ்ணசர்மாவை 33, கைது செய்து திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சின்னிகிருஷ்ண சர்மாவிற்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் பிரசாத் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ