உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேரந்தையில் மரங்கள் இல்லாத அரசுப் பள்ளி

சேரந்தையில் மரங்கள் இல்லாத அரசுப் பள்ளி

சிக்கல்: சிக்கல் அருகே சேரந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி வளாக நுழைவு வாயில் பகுதியில் கதவு பொருத்தப்படவில்லை. இதனால் கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. சேரந்தையை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி கோவிந்தன் கூறியதாவது:வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் ஏதுமின்றி பொட்டல் தரையாக காட்சி தருகிறது. இதனால் அதிக வெப்பம் நிலவுகிறது.பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வெளிப்புற கதவு அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்