உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

தொண்டி: மதுரையை சேர்ந்தவர் முருகன் 43. தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் 40. இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் சார்லஸ் டூவீலரை ஓட்ட முருகன் பின்னால் அமர்ந்திருந்தார். நம்புதாளை விலக்கு ரோட்டில் சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த முருகன் தவறி கீழே விழுந்தார். காயமடைந்தவரை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முருகன் இறந்தார். நம்புதாளை வி.ஏ.ஓ., ராஜேஷ் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ