உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நகராட்சி வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசூல்: கலெக்டரிடம் புகார்

நகராட்சி வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசூல்: கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துஉள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முருகபூபதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என கணக்கிட்டு வாகனம் ஒன்றிற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகும். இதில் முறைகேடு நடக்கிறது. மேலும் ரயில் நிலையம் செல்லும் வழியில் உரிய அனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிடம் செயல்படுவதாகவும் தெரிகிறது. நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கூடுதல் வசூல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை