உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பரமக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பரமக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

பரமக்குடி, இந்திய அஞ்சல் துறை சார்பில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் தலைமை வகித்தார். பரமக்குடி உப கோட்ட ஆய்வாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பரமக்குடி தலைமை அஞ்சலக அலுவலர் ராஜசெல்வம் வரவேற்றார். பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் தேசியக் கொடிகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர்.பரமக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு துவங்கிய ஊர்வலம், தாலுகா அலுவலகம் வழியாக ஓட்டப்பாலம், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் வழியாக மீண்டும் அஞ்சலகத்தை அடைந்தது. ஊர்வலத்தில் அஞ்சலக ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்