உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மேலும் 4 நாள் மீன்பிடி கட்

ராமேஸ்வரத்தில் மேலும் 4 நாள் மீன்பிடி கட்

ராமேஸ்வரம்:நடப்பாண்டு ஏப்.,15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இத்தடை முடிய ஒருநாள் முன்னதாக ஜூன் 14ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள 1200 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஜூன் 16ல் கரை திரும்பினர். இம்மீனவர்கள் தடையை மீறி மீன் பிடிக்கச் சென்றதால் ஜூன் 17ல் மீன்துறை அனுமதி டோக்கன் வழங்காமல் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராக இருந்த நிலையில் சூறாவளிக் காற்றில் கடல் கொந்தளிப்பால் மீன்துறை தடை விதித்தது.ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மேலும் 4 நாட்கள் தடை விதித்ததால் வருவாய் இன்றி வீடுகளில் முடங்கினர். இதனால் மீனவர்கள் அன்றாட குடும்பச் செலவுக்கு பணமின்றி அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை