உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ் குடியிருப்பை காலி செய்யும் அவலம்

போலீஸ் குடியிருப்பை காலி செய்யும் அவலம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் கடந்த பல நாட்களாக காவிரி குடிநீர் வராததால் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்துார் டி.எஸ்.பி.,க்கு உட்பட்ட கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்டேஷன் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. ஸ்டேஷனில் பணிபுரியும் 10க்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பங்கள் தங்கி இருந்தனர்.இந்நிலையில் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே காவிரி குடிநீர் முறையாக வரவில்லை. டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். தண்ணீருக்காக சிரமப்பட்டு வரும் நிலையில் ஒருசில போலீஸ் குடும்பங்கள் வீடுகளை காலி செய்து முதுகுளத்துார், பரமக்குடிக்கு சென்று வாடகை வீட்டில் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தற்போது இருக்கும் ஒருசில குடும்பங்களும் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு முறையாக காவிரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ